அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் அடையாள அட்டை!!

உத்தேசிக்கப்பட்டுள்ள இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கும் வரை, அடுத்த மே மாதம் முதல் ஸ்மார்ட் அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விநியோகிக்கப்பட்டுள்ள பழைய லெமினேடிங் அடையாள அட்டை, இந்த ஸ்மார்ட் அடையாள அட்டையுடன் இரத்தாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 வயது முழுமை அடைந்த இளைஞர், யுவதிகள் மற்றும் திருத்தம் மற்றும் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காகவும் இந்த புதிய ஸ்மார்ட் அடையாள அட்டை புதிதாக விநியோகிக்கப்படவுள்ளது.

பழைய இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 45 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் தேசிய அடையாள அட்டைகளில் காணப்படும் சில குறைபாடுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், இந்த செயல் தற்போதைய காலத்திற்கு பொருத்தமற்றது எனவும் ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.