அமரர்.குழந்தைவேல் குமாரவேல் ஞாபகார்த்தக் கிண்ணம்-2017

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் போசகர்களில் ஒருவரான அமரத்துவம் அடைந்த அமரர்.குழந்தைவேல் குமாரவேல் அவர்களின் 13ம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்தும் குமாரவேல் வெற்றிக்கிண்ண கடின பந்து கிரிக்கெட் போட்டி.
விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.நேசராஜா அவர்களின் தலமையில் நடை பெற உள்ள இப் போட்டியானது நாளை திங்கள் கிழமை பி.ப 2 மணிக்கு காரைதீவு கனகரெட்னம் மைதானத்தில் விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து காரைதீவு ஜொலிகின்ஸ் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.
விளையாட்டு ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் விவேகானந்தா விளையாட்டு கழகத்தினர்.