அம்பாரை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் 50வது நாளாகவும் போராட்டம்

அம்பாரை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது 50 ஆவது நாளான இன்று மேற்க்கொள்ளப்பட்ட உறுதி மொழி…

இதுவரைக்கும் எங்களுக்கான தீர்வினை இந்த நல்லாட்சியோ நாங்கள் வாக்களித்த தலைமகளோ பெற்றுத்தரவில்லை.வீணாக எங்களை வைத்துக்கொண்டு அரசியல் காய் நகர்த்தல்களை தங்களது சுக போக வாழ்க்கையை நடாத்துவதற்கு எங்களை பயன்படுத்துகிறார்கள்.எதிர்வரும் தேர்தல்களில் இந்த பட்டதாரிகளின் பலம் என்ன ? ,இந்த நாட்டில் பட்டதாரிகளுக்கு இருக்கும் அந்தஸ்து என்ன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.

இந்த தலைமைகளை நம்புவதற்கு நாங்கள் தயார் இல்லை.எங்களுக்கான உரிமைகளை ஒரு சிறந்த தலைமைத்துவத்தினை உருவாகி அதன் கீழ் ,எங்களுக்கும் எதிர்வருகின்ற சமூகத்திற்கும் ஒரு சிறந்த தொடர்பை ஏற்படுத்துவோம் எனவும் போலியான தலைமைகளுக்கு வாக்களிக்க மாட்டோம் எனவும் வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் இந்த 50 ஆவது நாளில் மனம் நொந்து உறுதி பூண்டனர்.