அரச முகாமைத்துவ சேவையில் 3000 இற்கும் அதிகமானோரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக 3000 இற்கும் அதிகமானோர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச முகாமைத்துவ சேவைக்கான போட்டிப் பரீட்சையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கமான பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு முகாமைத்துவ சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.