அறிமுக ஆட்டத்தில் ஹற்றிக் சாதனை படைத்தார் ஹசரங்க, சுருண்டு மடங்கியது சிம்பாப்வே

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கு இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அணித்தலைவர் மத்தியூஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சிம்பாப்வே அணி, கடந்த போட்டியில் சதம் குவித்த சொலமன் மிரேயை இம்முறை ஓட்டமெதனையும் பெறாத நிலையில் இழந்நது. தொடர்ந்து அனுபவ வீரர் மசகட்சா 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் சண்டகானின் மாயாஜால சுழலில் சிக்கிய ஏர்வின் 21 ஓட்டங்களுடனும் சிகந்தர் ராசா 8 ஓட்டங்களுடனும் புறுல் 9 ஓட்டங்களுடனும் பீற்றர் மூர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்கள். மறுமுனையில் வில்லியம்ஸ் 13 ஓட்டங்களுடன் குணதிலக்கவிடம் இலக்கை பறி கொடுத்தார்.

அதிரடியாக ஆடிய மல்கம் வோலர் 38 ஓட்டங்களுடனும் திரிப்பானோ மற்றும் சத்தாரா ஓட்டமெதனையும் பெறாமலும் அறிமுக வீரர் வணிடு ஹசரங்கவிடன் பந்துவீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் தமது இலக்கை பறி கொடுத்தார்கள். அறிமுக ஆட்டத்தில் ஹற்றிக் சாதனை படைத்த மூன்றாவது வீரராக ஹசரங்க வரலாற்றில் பதிவானார்.

இறுதியில் 33.4 பந்துப்பரிமாற்றங்களில் 155 ஓட்டங்களுடன் சுருண்டு மடங்கியது சிம்பாப்வே. பந்துவீச்சில் சண்டகான் நான்கு இலக்குக்களையும் வணிடு ஹசரங்க மூன்று இலக்குக்களையும் கைப்பற்றினார்கள்.