இன்று கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு!

யாழ்ப்பாணம் செல்வச்சந்தி ஆலயத்திலிருந்து கடந்தமாதம் 3ம் திகதி கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை ஆரம்பித்த வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக் குழுவினர் 41 நாட்களின் பின்னர் (13)    வியாழக்கிழமை கிழக்கின் தென்கோடியிலுள்ள உகந்தமலை முருகன் ஆலயத்தை வந்தடைந்தனர்.

இவர்களுடன் பொத்துவிலில் வைத்து நெதர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்ரினா எனும் வெள்ளையின பெண்னும் இணைந்து கொண்டார். அத்தோடு அவருடன் இரு சிங்களவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து குழுவின் தலைவர் வேல்சாமி கருத்துத் தெரிவிக்கையில்,

பொத்துவிலிலிருந்து வரும் வழியில் நாவலாற்றுப் பகுதியில் இராணுவத்தினர் தண்ணீர் பவுசரில் குடிநீரை வழங்கினார்கள்.

உகந்தைமலை முருகனாலயத்திலிருந்து கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று 15ஆம் திகதி திறக்கப்படும்.