இன்று சொறிக்கல்முனையில் யேசுவின் 14திருப்பாட்டுநிலை சுருபங்கள் திறப்புவிழா!

காரைதீவு சகா

வரலாற்றுப்பிரசித்திபெற்ற சொறிக்கல்முனை திருச்சிலுவை தேவாலயத்தில் முதன்முறையாக சுருபத்தால் நிருமாணிக்கப்பட்டுள்ள யேசு பெருமானின் திருப்பாடுகளை தியானிக்கும் 14 நிலைகளும் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.

மட்டு.மாவட்ட மறைமாநில குருமுதல்வர் அருட்பணிஏ.தேவதாசன் அடிகளார் இன்று 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7மணிக்கு திறந்துவைக்கவுள்ளார்.

அந்நிகழ்வில் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் இறுவெட்டு வெளியீடு நடைபெறவுள்ளது. தொடர்ந்து திருப்பலி பூஜையும் நற்கருணை எழுத்தேற்றமும் இடம்பெறும்.

இதேவேளை மார்ச் 1ஆம் திகதி விபூதி புதன் நிகழ்வு ஆரம்பமயாயிருக்கிறதெனவும் திருச்சிலுவைப் பயணத்தை தியானிக்க சொறிக்கல்முனை திருத்தலம் ஆயத்தமாகிவருகின்றது எனவும் ஆலயபங்குத்தந்தை அருட்தந்தை ஜே.திருச்செல்வம் அடிகளார் தெரிவித்தார்.