இன்றைய ராசிபலன் 13.07.2017

மேஷம்

திர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்

யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தனலாபம் உண்டு.

மிதுனம்

தொட்டகாரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்பட இயலும். வருமானம் திருப்தி தரும்.

கடகம்

வசர முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நாள். அதிக விரயங்கள் ஏற்படலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.

சிம்மம்

ட்பால் நன்மை கிட்டும் நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். உடல் நலனில் அச்சுறுத்தல் தோன்றும். கடன் சுமை கூடும்.

கன்னி

னிமையான நாள். திருமண வாய்ப்புகள் கைகூடி வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்துதவ முன்வருவர்.

துலாம்

நெருக்கடிகள் அகலும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தியுண்டு.

விருச்சிகம்

நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உவர்.

தனுசு

வாரிசுகளால் அனுகூலம் ஏற்படும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர்.

மகரம்

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்டவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று சுமுகமாக முடியும். தொழில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்

ணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். பிறருக்காக பொறுப்புச் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும்.

மீனம்

ண்பர்கள் உதவியால் நலம் காணும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பதன் மூலம் பகை மாறும்.