இன்றைய-ராசிபலன்-(15-08-2017)

மேஷம்:

உடல்நலனில் அக்கறை தேவை. செயல் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு, சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

 

ரிஷபம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

 

மிதுனம்:

உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற தாமதமாகும். லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு பணம் செலவாகும். எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தர வேண்டாம்.

 

கடகம்:
தாமதமான செயல் மளமளவென நிறைவேறும். நற்குணம் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி உண்டாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
சிம்மம்: 
முக்கியப் பணிகளை, பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள், ஆடம்பர எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். வருமான பற்றாக்குறை அகலும், வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வீடுகட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தடுமாற்றங்கள் அகலும்.
துலாம்:
நிதானமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். லாபம் சுமாராக இருக்கும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும்.
விருச்சிகம்: 
கருத்து நிறைந்த பேச்சால் பிறரைக் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சராசரி வருமானத்துடன், நிலுவைப் பணமும் வசூலாகும். பணியாளர்கள், நிர்வாகத்தின் நல்லெண்ணத்திற்கு உரியவராவர். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்பர்.
தனுசு:
உங்கள் நலனில் தனி கவனம் செலுத்துவீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர்.
மகரம்:
உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.
கும்பம்:
எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றி வருவீர்கள்.
மீனம்:
எதிரியையும் மன்னிக்கும் பெருந்தன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு மறையும். லாபம் உயரும். பணியாளர்கள், நிர்வாகத்தின் ஆதரவுடன் வளர்ச்சியடைவர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.