இன்றைய ராசிபலன் 31.08.2017

மேஷம்:

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

ரிஷபம்:

சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். உத் யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்

மிதுனம்:

மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்:

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்:

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.

கன்னி:

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்:

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் அமைதி திரும்பும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத் யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

தனுசு:

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

மகரம்:

வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக் கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கும்பம்:

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதரங்கள் பாசமழை பொழிவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்:

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.