இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 8000 இற்கும் அதிக மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி

நேற்று வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கடந்த வருடம் 6102 மாணவர்களே 9 பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 7.63 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன் வரலாறு பாடத்தில் 80.75 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.

 

வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர வகுப்பிற்கு தோற்றுவதற்கு 69.94 வீதமானோர் தகுதி பெற்றுள்ளனர்.

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 0.61 வீதம் இந்த வருடம் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.