இலங்கையில் இந்து, பௌத்தசமய நடைமுறைகள் ஓர் ஒப்பீடு..

இலங்கையில் இந்து,பௌத்தசமய நடைமுறைகள் ஓர் ஒப்பீடு..

இத்தலைப்பினுடே இந்துபௌத்தசமயங்கள் பற்றிய அறிமுகம் இலங்கையில் இந்து,பௌத்த சமயங்கள் தோன்றிய வரலாற்று பின்ணணிகள். பல்வேறு காலகட்டங்களிலும் இடம் பெற்ற சமய நடைமுறைகள் என்பவை நோக்கப்பட்டுள்ளன.
இந்து சமயம் உலகில் நின்று நிலவும் பல்வேறு சமயங்களிலே  காலத்தால் முந்திய சிறப்பும் தொன்மையும் கொண்ட சமயமாக இந்து சமயம் போற்றப்படுகிறது. இந்து என்ற சொல் சிந்துவெளியில் வாழ்ந்த மக்களால் கடைப்பிடிக்கப்பபட்ட ஒரு சொல் ஆகும் இதன் மூலம் சிந்துவெளி காலமக்களால் கடைப்பிடிக்கப்பட்ட சமயம் என்பதையும், இந்திய மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட சமயம் என்பதை சுட்டும் விதமாக வெளிநாட்டவராகிய பாரசீகர், கிரேக்கர் தமது மொழியிலே ஹிந்து என கூறப்பட்டசொல் மருவி இந்து எனஅழைக்கப்பட்டது என்பர்.
கிமு 6 ஆம் நூற்றாண்டில் மத்தியகங்கை சமவெளிகளில் பல்வேறுசமயப்பிரிவுகள் தோன்றினஅச்சமயம் 62 சமயபிரிவுகளாக இருந்ததாக நாம் அறிகின்றோம். இவற்றில் பலசமயப்பிரிவுகள் பிராந்திய பழக்கவழக்கங்களையும் வடக்கு, கிழக்கு இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் அனுட்டித்து வந்த சமயவினை முறைகளையும் அடிப்படையாக கொண்டமைந்தன என்றும் இச்சமயபிரிவுகளில் சமணமும் பௌத்தமும் மிகவும் ஆற்றல் வாய்ந்தசீர்திருத்த இயக்கங்களாகஉருவேடுத்து வளர்ந்தன என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறான சமயங்கள் தோன்றகாரணம் யாதுஎனநோக்கின் ஒருசமயத்தில் ஏற்படும் குறைபாடுகள் இன்னோரு சமயத்தின் எழுச்சிக்கு காரணம் எனலாம்.
இலங்கையில் இந்து,பௌத்த சமயங்கள் தோற்றம் பெற்றவரலாற்றுபிண்னணியை நோக்கும் போதுபாக்குத் தொடுவாயில் பிரிவுண்டிருப்பினும் பாரதநாட்டிற்குமிக அண்மையில் இலங்கைஅமைந்துள்ளால் அந்தநாட்டின் சமயகலாசாரத்தின் படர்ச்சி இங்கும் பண்டையகாலம் தொட்டே திகழ்ந்துள்ளமை இயல்பேயாகும்.

வரலாற்றுக்கு முன்பிருந்தே இலங்கையில் இந்துசமயம் பரவியிருந்து இன்றும் தொடர்வது குறிப்பிடதக்கது. இராமாயண இதிகாசகாலத்திலேயே இலங்கையும் அதன் அரசனான இராவணன் பற்றியசெய்திகளைஅவ்விலக்கியத்தினுடேஅறியலாம். இதன் மூலம் இராவணன் ஒருசிவபக்தன் என்பதும், அவனது பட்டத்துராணிமண்டோதரி சிவவழிபாட்டினைமேற்க்கொண்டாள் என்பதையும் இராமாயணத்தினுடேஅறியக்கூடியசெய்தியாகும்.இலங்கையிலேவரலாற்றுக்காலத்தில்வாழ்ந்தசாதியினர் இயக்கர் எனப்படுவோர். இராவணன் இயக்கன் எனவும், இலங்கையில் முதல் குடியேறியானவிஜயன் இலங்கைக்குவந்தபோதுதன் மனைவியாய் ஏற்றவள் குவேனிஎன்பாள் அவள் இயக்கிஎன்பதும் வரலாற்று நூலாகியமகாவம்சம் மூலம் அறியக்கூடியசெய்திதமிழிலேவந்தயாழ்ப்பாணவைபவமாலைவிஜயனை இந்துமதத்தினன் என கூறுகிறது. எனவே இவற்றைஅடிப்படையாககொண்டு இலங்கையில் இந்துசமயம் பரவியவரலாற்றைஅறிலாம்.
பௌத்தசமயத்தைநோக்கும் போதுதெராவாதபௌத்தம் பெருவாரியாகவிளங்கும் தெற்கில் உள்ளநாடுகளில் தொடங்கினால் முதலில் இலங்கைகாணப்படுகிறது இங்குபெருவாரியாகபௌத்தர்களேகாணப்படுகின்றனர் இங்குஅரசமதமாகபௌத்தமேகாணப்படுகிறது இலங்கைதீவுபௌத்தசமயபண்பாட்டைபாதுகாப்பதில் முக்கியபங்காற்றுகிறது.

இங்குபாதுகாத்துவைக்கப்பட்டுள்ளபௌத்தசமயவரலாற்றுஆதாரங்களின்படிகி.மு 250 ல் அசோகசக்கரவர்த்தியின் தூதுவரானமஹிந்தாஎன்றதுறவியால் பௌத்தசமயம் இலங்கைக்குகொண்டுவரப்பட்டதுமஹிந்ததேரருடையதுறவிகளால் முதன் முதலாகஅனுராதபரத்தில் மடாலயம் ஒன்றுஅமைக்கப்பட்டுஅதன் வழியேபௌத்தசமயம் பரப்பட்டதுஎன கூறப்படுகின்றது.

சமயநடைமுறைகள் பற்றிநோக்கும் போது இந்து,பௌத்தசமயங்களின் தெய்வங்கள்,சடங்குகள்,சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பண்டிகைகள்,விழாக்கள் போன்றவற்றின் மூலம் சமயநடைமுறைகளைஅறிந்துகொள்ளலாம். இந்துக்களுக்கானசமயநடைமுறைகளைபௌத்தர்களும் பௌத்தர்களுக்கானசமயநடைமுறைகளை இந்துக்களும் காலத்துக்குஏற்றவகையில் உள்வாங்கிசெயற்படுகின்றமைகுறிப்பிடதக்கது. அந்தவகையில் இந்துதெய்வங்களாகியமுருகன் கணபதிசிவன் போன்றதெய்வங்களைபௌத்தர்கள் வழிபடுகின்றனர் உதாரணமாககதிர்காம ஸ்ரீமுருகப்பெருமானைகதரகமதெய்யோஎனவழிபடுவதை கூறலாம். கதிர்காத்தில் இந்துபௌத்தஏனைய சமயத்தவர்களுக்குரியவழிபாட்டுத்தலங்களும் அமைக்கப்பட்டுள்ளமைசிறப்பிற்குரியதாகும் கதிர்காமமுருகன் ஆலயத்திற்கு இந்துக்களைபோன்றுபௌத்தர்களும் பாதயாத்திரைசென்றும் நெர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டுவருகின்றமை இந்துசமயத்தின் சிறப்பைமேலும் மேருகூட்டுகிறது.

இந்துக்கள் கௌதமபுத்தரைவிஸ்னுவின் அவதாரமாகபாவித்துவழிபடுகின்றவழமை இலங்கையில் காணப்படுகின்றது.பௌத்தசமயசிறுதெய்வங்களாகியமணிமேகலை,தாராதேவிபோன்றதெய்வங்களை இந்துசமயம் ஏற்றுக்கொண்டுள்ளதுமணிமேகலைதெய்வத்தை இந்துசமயஆலயங்களில் பரிவாரதெய்வங்களுள் ஒன்றாககாணலாம் ஆதிகாலம் தொடக்கம் இன்றுவரை இந்துதெய்வங்களுக்கானஆலயங்கள் அமைக்கப்பட்டனவிஜயன் ஒருபௌத்தசமயத்தைசார்ந்தஅரசனாககாணப்பட்டபோதும் அவனால் நான்குதிசைகளிலும் நான்குசிவன் ஆலயங்கள் அமைக்கப்பட்டமையைஎடுத்துக்காட்டாக கூறலாம். இது ஏனைய மதங்களுக்குஅரசர்கள் வழங்கியமுக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படும் அதேவேளைஅக்காலமக்கள் இந்துசமயநடைமுறைகளையும் உள்வாங்கியவர்களாககாணப்பட்டார்கள் என்பது இதன்மூலம்வெளிப்படுகின்றது.

இந்துசமயத்தில் கூறப்படும் மற்றுமோருமுக்கியமானவிடையம் நான்குஆச்சிரமங்கள் பிரம்மச்சரியம் கிருகஸ்தம் வானப்பிரஸ்தம் சன்னியாசியம் என்பன இதில் பிரம்மச்சரியம் கல்விகற்கும் நிலை,அதாவதுகுருகுலகல்வியைமேற்கொள்ளும் நிலையாகும். இந்நிலையில் குருவிற்குபணிவிடைசெய்து குரு ஓய்வாகஉள்ளநேரங்களில் குருவிடம் இருந்துகல்வியைபெற்றுக்கொள்ளலாகும். இம்முறையானது இலங்கையைபொறுத்தவரையில் இந்துசமயத்தவர்களிடம் சற்றுகுறைவாகவேகாணப்படுகின்றது. ஆனால் பௌத்தர்களிடம் மிகமுக்கியஒருநிலையாககருதப்படுகின்றது. இலங்கையைபொறுத்தவரைபௌத்த தூறவிகளைபிக்குகள் எனவும் துறவறபெண்களைபிக்குனிகள்எனவும் அழைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. இந்துசமயத்தில் குருக்கள் எனஅழைக்கும் வழமையும் காணப்படுகிறது. பௌத்ததுறவிகளுக்குசமூகரீதியாகமதிப்பும் மரியாதையும் சமயரிதியாகமுதலிடமும் அதாவதுபௌத்தசமயத்தைபோதிப்பவர்களாகஅவர்கள் மதிக்கப்படுகின்றஒருநிலைகாணப்படுகின்றது இந்துசமயத்தில் துறவிகள் காணப்படுகின்றனர் மதபோதகர்களாகஅன்றி ஆலய வழிபாடுகிரியைகளைஆற்றுபவராககாணப்படுகின்றார். இரு சமயதுறவிகளும் சமயவழிபாட்டுமுறைஅடிப்படையில் வேறுபட்டநடைமுறைகளையேபின்பற்றுகின்றனர்.
இந்து,பௌத்தசமயநடைமுறைகளுள் ஒன்றாகியஆசிபேறும் விடையம் .ஏதாவதுஒருவிடையத்தைஆரம்பிக்கும் போதுஎங்காவது தூர பயணங்களுக்குசெல்லும் போது இரு சமயத்தவர்களும் தங்களதுதாய் தந்தைபெரியோர் அல்லதுசமயஸ்தலங்களுக்குசென்றுகுருவிடம் ஆசிபெற்றுசெல்கின்றவழமைகாணப்படுகின்றது.எந்தஒருவிடையத்தைஆரம்பிக்கும் முன்பும் இறைவனைவணங்கிவிட்டுஆரம்பிக்கின்றவமையானதுபொதுவானஒன்றாககாணப்படுகின்றது.
பௌத்தர்களிடையேமடங்களைஅமைக்கின்றமுறையானதுகாணப்படுகின்றது இலங்கையின் பல இடங்களிலும் துறவியர்களுக்கானமடங்கள் அமைக்கப்பட்டதற்கானசான்றுகள் காணப்படுகின்றனஉதாரணமாக அஸ்கிரியபீடம்,மல்வத்துபீடம்போன்றவற்றை கூறலாம் இங்குதுறவியர் கூட்டத்தினர் தங்கியிருந்துசமயபோதனைகளில் ஈடுபட்டுவருகின்றமைகுறிப்பிடதக்கது.

இந்துக்களுக்கானமடபாரம்பரியடிமுறையானதுஆதிகாலத்தில் அதிகமாககாணப்பட்டபோதும் தற்காலத்தில் சற்றுகுறைவாகவேகாணப்படுகின்றதுஒருசில இந்துசமயநிறுவனங்கள் இந்துசமயத்தைவழம்படுத்தும் முயற்சியில் இந்துசமயவிருத்திச்சங்கம்,விவேகானந்த சபை போன்றவைஅழிந்துபோகும் சமயநடைமுறைகளைகிராம,நகரமட்டங்களில் உயர்ச்சியடையசெய்துவருகின்றமைகுறிப்பிடதக்கதுகுறிப்பாகமலையகம்,கிழக்குபகுதிகளில் காணப்படும் காயத்திரிபீடங்கள் வாயிலாகவும்சமயநடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றமைகுறிப்பிடதக்கது.தியானம் செய்தல் என்றவிடையத்திலும் ஒத்தநடைமுறையைஉடையதாககாணப்படுகின்றதுஆதிகாலத்தில் இந்துசமயத்தவர்கள் ஆச்சிரமங்களில் தியானத்தைமேற்கொண்டனர் தற்காலத்தில் இலங்கையில் ஆச்சிரமமுறைவழக்கிழந்தநிலையில் இந்துக்கள் மனஅமைதிக்காககாயத்திரிபீடங்களிலும்,ஆலயங்களிலும் தியானம் மேற்கொள்கின்றனர் இதேபோன்றுபௌத்தசமயத்தவர்களும் விகாரைகளிலும் தங்கள் மடாலயங்களிலும் தியானத்தைமேற்கொள்கின்றமைகுறிப்பிடதக்கது.

பஞ்சமாபாதங்களாககருதப்படும் கொல்லாமை,கல்லாமை,கள்ளுண்ணாமைபுலால் மறுத்தல் பிறர்மனைவிளையாமைபோன்றசமயநடைமுறைகளை இந்து,பௌத்தசமயிகள் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளமைகுறிப்பிடதக்கது இதனை இரு சமயதுறவியரும் விஷேடமாகபின்பற்றுகின்றமைஎடுத்துகாட்டதக்கது. சிலவிஷேடதினங்கள் என்றஅடிப்படையில் இரு சமயத்தவர்களதுசமயநடைமுறைகள் ஒத்ததாககாணப்படுகின்றதுஎடுத்துக்காட்டாகபூரணைதினங்களில் இந்துஆலயங்களில் விஷேடவழிபாடுகள் இடம்பெறுவதைபோலவேபௌத்தவணக்கஸ்தலங்களிலும் விஷேடமானவழிபாடுகளும் போதனைகளும் இடம்பெறுகின்றமைகுறிப்பிடதக்கஒன்றாகும்.
இந்துசமயத்தில் காணப்படும் கையில் நூல் அணிதல் எனும் விடையத்தில் பௌத்தசமயிகளும் ஒற்றுமைப்பட்டுசெல்கின்றனர் ஏதாவதுஒருதேவைநிறைவேறுவதற்காகவேண்டிஅல்லதுகாற்றுகருப்புஅண்டாமல் இருக்கவேண்டும் என்றநம்பிக்கையின் நிமித்தம் இந்துக்கள் ஆலயத்திற்குசென்று நூல் அணியும் வழக்கம் காணப்படுகின்றது இதனைப் போலபௌத்தசமயத்தவர்களும் விகாரைகளுக்குசென்றுஅங்குள்ளகுருவிடம் அதாவதுபிக்குவிடம் நூல் அணிந்துகொள்ளும் வழமைகாணப்படுகின்றது.

வழிபாடுஎன்றவிடையத்தைஎடுத்துநோக்கும் போது இருபாலாரும் வழிபாடுகளைமேற்க்கொள்ளசெல்லும் போதுசுத்தமான ஆடை அணிந்துவழிபாட்டுக்குதேவையானபொருட்களைஎடுத்துக் கொண்டுசெல்வதுநடைமுறையாககாணப்படுகின்றது. இந்துசமய ஆலய வழிபாட்டுமுறைகளுள் ஒன்றானமகோற்சவம் என்றவிடையம் இதன் போதுஆலயத்தில் திருவிழாஎடுத்தல் நிகழ்வு இடம் பெறும் இதேநிகழ்வுபௌத்தர்களிடையேபெரகேராஎன்றபெயருடன் காணப்படுகின்றது
பண்டிகைஎன்றவிடையத்தைநோக்கும் போதுபுது வருடப்பிறப்பு ஜனவரிமுதலாம் திகதி இரு சமயத்தவர்களுடையஆலயத்திலும் விஷேடவழிபாடுகள் இடம் பெறுவதுவழமை இது ஒருசமயநடைமுறையாகபின்பற்றப்பட்டுவருகின்றது. சித்திரைவருடப்பிறப்புசித்திரை 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்துக்களும் பௌத்தர்களும் சித்திரைவருடப்பிறப்பினைகொண்டாடுகின்றனர் வருடப்பிறப்புகருமமாகியமருத்துநீர் தேய்த்தல் என்றமுறையானதுபௌத்தர்களிடையேவிகாரைகளுக்குசென்றுஎண்ணெய் தேய்த்தல்என்றவகையில் மாறிக்காணப்படுகின்றது இந்துபௌத்தர்களிடையேபுத்தாடைஅணிதல்,கைவிஷேடம்,உறவினர் வீடுகளுக்குசெல்லல்,விருந்துபசாரம் போன்றவிடையத்தில்ஒரேவகையானநாடைமுறைகளேகாணப்படுகின்றன.
இவ்வாறாக இரு சமயத்தின் தோற்றம்,அதன் காலஎல்லைமாறுபட்டிருப்பினும் சமயநடைமுறைஎன்றவகையில் இந்துசமயத்தில் காணப்படுகின்றநடைமுறைகளைபௌத்தசமயமும் பௌத்தசமயத்தில் காணப்படுகின்றநடைமுறைகளை இந்துசமயமும் மாறிமாறிபின்பற்றிவருகின்றமைகாலம் காலமாக இடம்பெற்றுவருகின்ற ஒன்றாக காணப்படுகின்றது இந் நடைமுறைகளை எதிலிருந்துஎதுகற்றுக் கொண்டுள்ளது என்பது ஒருகேள்விக்குறியான ஒன்றாக உள்ளது.

உலகநாகன்.சுபராஜ் BA Sp.in Hindu Civilization
காரைதீவு.