இலங்கை அணி 259 ஓட்டங்களினால் வெற்றி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் தமது 2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இனிங்ஸில் 494 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
பங்களாதேஷ் அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.