இ.கி.மி பெண்கள் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி! தாகூர்மணி இல்லம் சம்பியன்

175 புள்ளிகளுடன் தாகூர்மணி இல்லம் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.!

காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று சனிக்கிழமை இரண்டாவது தடவையாக காரைதீவு கனகரெட்னம் மைதானத்தில் அதிபர் செ.மணிமாறன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் முதலில் அதிதிகளை மாலை அணிவித்து மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசியக்கொடி,பாடசாலை இல்லக்கொடிகள் ஏற்றப்பட்ட பின்பு ஒலிம்பித்தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமானம் செய்துகொள்ளப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தாகூர்மணி,சாரதாமணி,காதாம்பரிஆகிய இல்லங்களுக்கிடையிலான சுவட்டு நிகழ்வுகள்,அணிநடை,அஞ்சல் ஓட்டம்,உடற்பயிற்சி கண்காட்சி, இல்லச்சோடனை போன்றன நடைபெற்றது.இதன்போது இல்லங்களுக்கிடையிலான திறனாய்வுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான சான்றீதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

தாகூர்மணி இல்லம் 175புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப் பெற்றது. அவ்வில்லம் இவ்வாண்டுக்குரிய சாம்பியனாகவும் தெரிவுசெய்யப்பட்டது. 152புள்ளிகளுடன் சாரதாமணி இல்லம் இரண்டாமிடத்தையும் காதாம்பரி இல்லம் 140புள்ளிகளைப்பெற்று மூன்றாமிடத்தையும் சுவீகரித்துள்ளது.

இவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் வழங்கிவைத்தார்.

இன் நிகழ்விற்கு கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.