உகந்தையில் அம்பாரை மாவட்ட பிராந்திய மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் யாத்திரிகர்களுக்கு பொதிகள் வழங்கி வைப்பு

அம்பாரை மாவட்ட பிராந்திய 

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் கதிர்காமத்திற்கு கால்நடையாக குமண வனத்தினுடாக செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு மருந்து, உலருணர்வுப் பொருட்களையும் வழங்கி வைக்கும் நிகழ்வு, அம்பாரை மாவட்ட பிராந்திய முகாமையாளர் டி.எம்.கபில திஸாநாயக்க் தலைமையில் 16.07.2017 திகதியன்று உகந்தை முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.இலங்கையிலுள்ள மக்கள் வங்கி கிளைகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பாதயாத்திரிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு , இப் பொருட்கள் வழங்கி வைத்தனர். மேலும் இந் நிகழ்வுகளின் போது மக்கள் வங்கிகளினது கிளை முகாமையாளர்களும் , ஊழியர்களும் கலந்து கொண்டனர்.