உலகில் அதிகமாக பேஸ்புக் பாவிப்பவர்கள்-அமெரிக்காவை பின் தள்ளி முதலிடத்துக்கு வந்தது இந்தியா

பேஸ்புக்’ சமூக வலைத்தளம் உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர்.

புதிய ஆய்வில் இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர்.

எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.

‘தி நெக்ஸ்ட் வெப்’ அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ‘பேஸ்புக்’ குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே ‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இது 12 சதவீதமாக அமைந்துள்ளது.