உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை நடைபெற்ற சுகாதாரத்திற்கான விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை டொல்பின் விளையாட்டு கழகமும் கல்முனை ஆதார வைத்தியசாலையும் இணைந்து நடத்திய சுகாதாரத்திற்கான விழிப்புணர்வு  கல்முனையில் சனிக்கிழமை  (08.04.2017) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை சுகாதார வைத்திய அதிகாரி ரமேஸ்,  கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்,கல்முனை பற்றிமா கல்லூரி உதவி அதிபர்,கல்முனை மாணவர் மீட்புப் பேரவைத் தலைவர் எஸ்.கணேஸ் மற்றும் டொல்பின் விளையாட்டு கழக உறுப்பினர்களுடன் வைத்தியசாலை உஸ்தியோகஸ்ர்களும் கலந்து கொண்டனர்.