என் தமிழ்!

ஒன்று ஒன்று ஒன்று
உலகப்பொதுமறை திருக்குறள் ஒன்று.

ஒன்றும் ஒன்றும் இரண்டு
உடலில் கண்கள் இரண்டு.

ஒண்றும் இரண்டும் மூன்று
முக்காலியின் கால்கள் மூன்று.

ஒன்றும் மூன்றும் நான்கு
நம்மைச் சுற்றி திசைகள் நான்கு.

ஒன்றும் நான்கும் ஐந்து
ஒருகை விரல்கள் ஐந்து.

ஒன்றும் ஐந்தும் ஆறு
உணவில் சுவைகள் ஆறு.

ஒன்றும் ஆறும் ஏழு
உலக அதிசயங்கள் ஏழு.

ஒன்றும் ஏழும் எட்டு
எதையும் முயற்சியால் எட்டு.

ஒன்றும் எட்டும் ஒன்பது
கிரக எண்ணிக்கை ஒன்பது.

ஒன்றும் ஒன்பதும் பத்து
இருகை விரல்கள் பத்து.