எமது இணையகுழு உறுப்பினர் சிவானந்தம் தர்மிகனின் சடலம் காரைதீவில்

களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான களுத்துறை சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவானந்தம் தர்மிகனின் சடலம் காரைதீவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தரின் சடலம் இன்று காலை 03 மணியளவில் காரைதீவிற்கு கொண்டு வரப்பட்டு, சிறைச்சாலை திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறைச்சாலை வாகனம் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எமது காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவானந்தம் தர்மிகனும் உயிரிழந்திருந்தார்.தற்போது அவருடை பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இறக்கும் வரை அவர் எமது இணைய குழு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூதவுடல் நாளை மாலை 04 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.