எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்

காயமே இது பொய்யென்றாலும் சில காலமாகவது இந்தப் பொய்யான உடல் நிலைத்து நிமிர்ந்து நிற்கவும், நாம் இயங்கவும் காரணமாக இருப்பவை எலும்புகள் தான். மனித உடலின் வடிவமைப்பை தீர்மானிப்பவையும் இவைதான். எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு கல்சியம் சத்து அவசியம்.

ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கல்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது. இது நீடித்தால், பின்னர் எலும்புகளின் அடர்த்தி குறைந்து பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

* உப்பைக் குறையுங்கள்

உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் கல்சியத்தின் அளவு குறையும். ஏனெனில் அதிகப்படியான சோடியம் உடலில் இருந்து அதிகப்படியான அளவில் கல்சியத்தை சிறுநீரகங்களின் வழியே வெளியேற்றும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க ஒரு நாளைக்கு 1,500 மி.கி. (1/2 தேக்கரண்டி) அல்லது அதற்கும் குறைவான அளவில் சோடியத்தை உட்கொண்டு வாருங்கள் மற்றும் குறைந்தது 1,200 மி.கி. கல்சியத்தையும் தவறாமல் உண்ணுங்கள். குறிப்பாக வயது அதிகரிக்கும் போது உப்பின் அளவைக் குறைத்து வந்தால் தான் எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்

* சோடாவுக்கு விடை சொல்லுங்கள்

ஒருவாரத்தில் 7-க்கும் அதிகமானளவில் சோடா பானங்களைப் பருகினால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் கோலாவில் உள்ள பாஸ் பாரிக் அமிலம், உடல் கல்சியத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்துவதோடு, குடலையும் பலவீனமாக்கும். எனவே சோடா பானங்களைப்பருகுவதைத் தவிர்த்து, பழச்சாறுகளைப் பருக ஆரம்பியுங்கள்.

* மதுவும் எலும்புமுறிவை உண்டாக்கும்

கோப்பி, தேநீர் போன்ற பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இவற்றில் உள்ள காப்ஃபைன் எலும்புகளில் இருந்து கல்சியத்தை வெளியேற்றி, வலிமையை இழக்கச் செய்யும். அதிலும் ஒரு முறை நீங்கள் 100 மி.கி. காப்ஃ பைன் எடுத்தால், 6மி.கி. கால்சியம் எலும்புகளில் இருந்து வெளியேற்றும். அதிகப்படியான மதுசாரம் எலும்புகளின அடர்த்தி மற்றும் எலும்புகள் உருவாக்கத்தைக் குறைத்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்கும். எனவே மதுபானங்கள் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

*எதை உண்ணவேண்டும்?

தக்காளி, காளான் கத்திரிக்காய், வெள்ளைஉருளைக்கிழங்குபோன்றவை எலும்பு அழற்சியை ஏற்படுத்தி, நாளடைவில் ஒஸ்டியோபோரோசிஸிற்கு வழிவகுக்கும். ஆனால் இவற்றில் எலும்புகளுக்கு தேவையான விற்றமின் களும், இதர ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதனை உண்பதை முற்றிலும்தவிர்க்காமல், அளவாக உட்கொண்டு வாருங்கள். குறிப்பாக தினமும்தவறாமல் 1,200மி.கி. கல்சியத்தை உண்ணுங்கள். பசளிக்கீரையில் கல்சியம் ஏராளமாகஇருந்தா லும், இவற்றைப் பச்சையாக உட்கொண்டால், அதில் உள்ள ஒக்ஸலேட்டுகள் கல்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கும். எனவே இவற்றை பச்சையாக உட் கொள்ளாதீர்கள்.