ஏப்ரல் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன்கள்

ஏப்ரல் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன்கள்

மேஷம்

முற்போக்குவாதிகளே! 10-ந் தேதி வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். தடைகள் நீங்கும். சகோதரங்களுக்குள் ஒற்றுமை பலப்படும். முன் பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப் படாமல் இருந்த சொத்திற்கு மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். இந்த மாதம் முழுக்க பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். மகனுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பெற வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னைகள் வந்துப் போகும்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்ரன் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். உங்களுடைய புதிய திட்டங்களுக்கு மனைவி உதவுவார்.

உங்களுடைய குறை, நிறைகளை சுட்டிக் காட்டி உங்களை நல்வழிப்படுத்துவார். அதை நீங்கள் ஏற்றுக் கொள்வது நல்லது. வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீடு மாறுவீர்கள். வாகனப் பழுது நீங்கும்.

ராசிக்கு 6-ல் குரு மறைந்துக் கிடப்பதால் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கை துரேகமான செயல்களை நினைத்து வருந்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். காய், கனிகளை உண்பது நல்லது. நண்பர்கள் விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும்.

வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியும் கிட்டும். புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும்.

கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். நிம்மதியையும், மன தைரியத்தையும் தரக் கூடிய மாதமிது.

ரிஷபம்

ரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! இந்த மாதம் முழுக்க உங்களுடைய சுகாதிபதியான சூரியனும், ராசிநாதன் சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். புது பதவிகளும், பொறுப்புகள் தேடி வரும். வேலைக் கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

சிலர் சொந்தமாக முதலீடு செய்து தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 5-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ராகு 4-ல் நீடிப்பதால் தாயாரின் ஆரோக்யத்தில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், முதுகு, மூட்டு வலி வந்துப் போகும்.

வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது. தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். 11-ந் தேதி வரை செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று நிற்பதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். திடீர் பயணங்கள் உண்டு.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் கண்டகச் சனி நடைபெறுவதால் சின்ன சின்ன விவாதங்களும், மனைவிக்கு இடுப்பு வலி, மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள் வந்துப் போகும்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். உங்களின் கற்பனைத் திறன் வளரும். மாறுபட்ட அணுகுமுறையாலும், அனுபவ அறிவாலும் பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் மாதமிது.

மிதுனம்

கலகலப்பானவர்களே! சனிபகவான் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும்.

அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். ராகு 3-ம் வீட்டில் நிற்பதால் முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளை பாக்யம் கிட்டும். வீடு, மனை வேண்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை வரவேற்பார். மனைவிவழி உறவினர்களாலும் உதவிகள் உண்டு. சொந்த ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குரு 4-ல் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும்.

தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், கை, கால் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். முறையான அரசாங்க அனுமதியின்றி வீடு கட்ட தொடங்க வேண்டாம். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். செல்போன், லேப் டாப் புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

கடகம்

நன்றிமறவாதவர்களே! உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமான வீடுகளில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். குடும்ப நிலைமையை புரிந்து நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

பூர்வீக சொத்தை விற்று கடன் பிரச்னைகளையும் தீர்த்து நகரத்திற்கு, ஊருக்கு அருகில் இடம் வாங்கி வீடு வாங்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்ரனும், புதனும் சென்றுக் கொண்டிருப்பதால் செல்வாக்குக் கூடும்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய நண்பர்கள் மீண்டும் தேடி வருவார்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும்.

5-ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கெட்ட கனவுகள் அதிகமாக வரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறுசிறு அவமானங்கள், இழப்புகளை நினைத்து அவ்வப்போது வேதனைப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

உங்களுடைய ராசிக்கு 3ல் குரு அமர்ந்திருப்பதால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

சிம்மம்

தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நிலைமைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகள் கிடைக்கும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும்.

புது வேலைக் கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாகயிருப்பதால் அரைக்குறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும்.

பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கான வழி, வகை பிறக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாகயில்லாததால் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையும் வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். போட்டிகள் குறையும். என்றாலும் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும்.

வேலையாட்கள் முரண்டுப் பிடிப்பார்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைச்சுமையைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.

கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள் அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.

கன்னி

விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! சனிபகவான் வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்ந்துக் கொண்டிருப்பதால் மனோபலம் கூடும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனம் சரியாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கும்.

வங்கிக் கடன் உதவியும் கிட்டும். 6-ம் தேதி வரை ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.

புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் 7-ம் தேதி முதல் புதன் வக்ரமாவதால் தொண்டை வலி, சளித்தொந்தரவு, வீண் டென்ஷன், நரம்பு சுளுக்கு வரக்கூடும். சூரியன் சாதகமாக இல்லாததால் தூக்கம் குறையும். முடிந்தால் யோகா, தியானம் செய்யப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

மனைவிக்கு சிறுசிறு நெருப்புக் காயங்கள், மாதவிடாய் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்துச் செல்லும். குரு ராசிக்குள் அமர்ந்திருப்பதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்துப் போகும். தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, தோலில் நமைச்சல் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும்.

உடல் உஷ்ணத்தால் தலை முடி உதிரும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரம் செழிக்கும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். செங்கல் சூளை, கமிஷன், உணவு, கட்டிட வகைகளால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். தடைகளையும் தாண்டி முன்னேறும் மாதமிது.

துலாம்

மனித நேயத்துடன் உதவுபவர்களே! 13ந் தேதி வரை உங்கள் பாதகாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அரசாங்கத்திடமிருந்து புது சலுகைகளும் பெறுவீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். உங்களுக்குள் இருந்து வரும் தாழ்வுமனப்பான்மை விலகும். முன்கோபத்தையும் குறைத்துக் கொள்வீர்கள். உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் 6-ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க மறைந்துக் கிடப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சாதாரணப் பிரச்னைகளுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருக்காதீர்கள். உன் சொந்தம்-என் சொந்தம் என்று மோதிக் கொண்டிருக்க வேண்டாம்.

நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உறவினர்கள் எது சொன்னாலும் அதை பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனப் பழுது வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆனால் உங்களுடைய ராசிக்கு சப்தமாதிபதியான செவ்வாய் பகவான் 10-ந் தேதி வரை 7-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்கள் இருவருக்குள் குழப்பத்தையும், பிரச்னைகளையும் உண்டாக்குபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைகளும் சுமூகமாக முடிவடையும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். ஏழரைச் சனி நடைபெறுவதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் வருங்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும். காதலும் கனியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையாளர்கள் அமைவார்கள். உத்யோகத்தில் வீண் பழி வரும். வேலைச்சுமை அதிகமாகும். அதிகாரிகள் உங்களுடைய கடின உழைப்பை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.

விருச்சிகம்

தளராத தன்னம்பிக்கையாளர்களே! குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நண்பர் வீட்டு திருமணம், சீமந்தத்தை சிறப்பாக நடத்துவீர்கள். ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது.

மற்றவர்களுக்காக ஜாமீன் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேப் போல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. சுக்ரன் சாதகமாகயிருப்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்றவற்றில் இருந்து வந்த தடைகள் விலகும்.

வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தள்ளுபடி விற்பனையில் புது வாகனம் வாங்குவீர்கள். 13ந் தேதி வரை ராசிக்கு 5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். அடிவயிற்றில் வலி வந்துப் போகும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் குழப்பங்களும், தோல்வியும் வந்துப் போகும். தகுதியில்லாதவர்களை தரமானவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருந்தாலும் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.

உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவுக் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும். ரசிகர்கள் வட்டம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.

தனுசு

பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்ரன் சென்றுக் கொண்டிருப்பதால் சமயோஜித புத்தியால் முன்னேறுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

வெளிமாநிலத்தில், அயல்நாட்டிலிருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்கள் பலம் எது, பலவீனம் என்பதை உணரக் கூடிய வாய்ப்புக் கிட்டும். உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளால் மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும் வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகள் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும் கூடி வரும்.

பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த நெருடல்கள் நீங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 13ந் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

சனியும், குருவும் சாதகமாகயில்லாததால் செலவுகள் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு உண்டாகும். கடன் பிரச்னையை நினைத்தும் அவ்வப்போது வருந்துவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! கோபம் குறையும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும்.

கேது 3-ல் நிற்பதால் வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்வீர்கள். அதேப் போல விளம்பர யுக்திகளையும் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உயரதிகாரிகள் உங்களுடைய திறமையை பரிசோதிப்பார்கள்.

கலைத்துறையினரே! சக கலைஞர்கள் மதிப்பார்கள். வேற்றுமொழி கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கூடி வரும். தொலை நோக்குச் சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சாதிக்கும் மாதமிது.

மகரம்

களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். தைரியம் கூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். புறநகர் பகுதியில் இருக்கும் சொத்தை விற்று நகரத்தில் வீடு, மனை வாங்கும் சூழல் உண்டாகும். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் செவ்வாய் சென்றுக் கொண்டிருப்பதால் மனஇறுக்கங்கள் நீங்கும்.

உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். இளைய சகோதர வகையில் அலைச்சல்கள் இருந்தாலும் மூத்த சகோதர வகையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் யோகாதிபதியான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடி வரும். விருந்தினர், உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

வாகனத்தை மாற்றவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். செல்வாக்கு ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்கள் யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

உங்களின் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். புது முதலீடு செய்து, புது தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். காதலும் இனிக்கும். கல்வியிலும் வெற்றி உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குருபகவான் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும்.

புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வேலையாட்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி உண்டு. புது பொறுப்புகளை உங்களை நம்பி மூத்த அதிகாரிகள் தருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கலைத்துறையினரே! தெலுங்கு, கன்னடம் நிறுவனத்திலிருந்து பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவதாகவும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களையும் தருவதாக

கும்பம்

யதார்த்தத்தை விரும்புபவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தை முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

இளைய சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் இருந்தாலும் முன்பிருந்த மனக்கசப்புகள் நீங்கும். சொத்துப் பிரச்னை சுமூகமாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்து வந்த சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு ஷேர் மூலமாகவும் பணம் வரும். கெமிக்கல், எலக்ட்ரிக்கல், உணவு தொடர்புள்ள கம்பெனி ஷேர்களால் பணம் வரும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான வெள்ளி பகவான் சாதகமாக இருப்பதால் வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். வாகனத்தையும் மாற்றுவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அவர்களின் உடல் நிலையும் சீராகும்.

உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு தளரும். உங்களின் கஷ்ட, நஷ்டங்களை கொஞ்சம் புரிந்து நடந்துக் கொள்வார்கள். உங்கள் மகனுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

மகளுக்கு இருந்து வந்த ஆரோக்ய குறைவு நீங்கும். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் 10-ல் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் சவாலான கடினமான காரியங்களை எடுத்து செய்யக் கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். அதற்கு பிரபலங்களும் பக்கபலமாக இருப்பார்கள். தைரியம் கிடைக்கும். ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

வெளி மாநில தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் பணப்பற்றாக்குறை இருக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடருவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களும் வருவார்கள்.

வேலையாட்களிடம் அதிக கண்டிப்புக் காட்ட வேண்டாம். உத்யோகத்தில் கொஞ்சம் நிம்மதி உண்டாகும். உங்களுடைய உழைப்பையும், நல்ல மனதையும், உடன்பணியாற்றுபவர்களும், சக ஊழியர்களும் புரிந்துக் கொள்ளத் தொடங்குவார்கள்.

கலைத்துறையினரே! உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொஞ்சம் கரடுமுரடான பாதையில் பயணிக்க வைத்தாலும் இனிக்கும் மாதமிது.

மீனம்

சமாதானத்தால் சாதிப்பவர்களே! சூரியன் சாதகமாக இல்லாததால் சோர்வு, களைப்பு, முதுகு வலி, மூட்டு வலி வந்துப் போகும். உங்களை யாரும் புரிந்துக் கொள்ளவில்லையென்று அலுத்துக் கொள்வீர்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனஇறுக்கம் குறையும். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகையும் கைக்கு வரும். சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் விலகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக வீடு, மனை வாங்குவதற்கு முயற்சி செய்தீர்களே!

ஆனால் உங்கள் ரசனைக் கேற்ப அமையாமல் போனதே! இந்த மாதத்தில் நீங்கள் விரும்பிய படி வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பத்திரப் பதிவும் செய்வீர்கள். தந்தையார் அவ்வப்போது கோபப்பட்டாலும் உங்களுக்கு உதவிகளையும் செய்வார். தந்தையாருக்கு லேசாக நெஞ்சு வலி வந்துப் போகும்.

உங்களுடைய ராசிக்கு சாதகமாக சுக்ரன் இருப்பதால் மனப்பக்குவம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அறிவுப் பூர்வமான முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அயல்நாட்டில், வெளிமாநிலத்தில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

உங்களுடைய ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால் மனைவிவழியில் அந்தஸ்து ஒருபடி உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர்த்திருத்தம் செய்து அதில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

உத்யோகத்தில் எதற்கெடுத்தாலும் குறைக் கூறிய அதிகாரியின் மனசு மாறும். உங்களை அதிகாரி புரிந்துக் கொள்வார். உங்களிடம் சில பொறுப்புகளையும் ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.