ஐ.சி.சி யின் புதிய தரவரிசை பட்டியலில் தென்னாபிரிக்க அணி முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் தென்னாபிரிக்க அணி ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.
நியுசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் தென்னாபிரிக்காவிற்கு இந்த முதலாவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் அவுஸ்ரேலியா அணியும் 3ம் இடத்தில் நியுசிலாந்து அணியும் காணப்படுகின்றன.
இந்தியா,இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் முறையே 4ம்,5ம் மற்றும் 6ம் இடங்களை பெற்றுள்ளன.