ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்!

பெங்களூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது. ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.அதேபோல் தமிழக வீரர் தங்கராசு நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ம் தேதி முதல் மே 21–ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் விடுவிக்க விடப்பட்டனர்.

அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல்.வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.

இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. பவன் நெஹியை பெங்களூர் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேத்யூசை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பென் ஸ்டோக்சை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் பென் ஸ்டோக்சை புனே அணி ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. மதியம் வரையில் இதுவே அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்தது.

நிகோலஸ் பூரனை மும்பை இண்டியன்ஸ் 30 லட்சம் ரூபாய்க்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்தன. இதேபோல் கோரி ஆண்டர்சனையும், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

பல்வேறு அணிகளுக்காக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விபரம் வருமாறு:–

டெல்லி டேர் டெவில்ஸ்
ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை) ரூ.2
கோடி கோரி ஆன்டர்சன் (நியூசிலாந்து) ரூ.1 கோடி
ககிசோ ரபடா (தென் ஆப்ரிக்கா) ரூ.5 கோடி
பேட் கம்மிஸ் (ஆஸ்திரேலியா) ரூ. 4.5 கோடி
ஆதித்யா டரே (இந்தியா) ரூ.25 லட்சம்
முருகன் அஷ்வின் (இந்தியா) ரூ.1 கோடி

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) ரூ.14.5 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
பவன் நேகி (இந்தியா) ரூ.1 கோடி
தைமல் மில்ஸ் (இங்கிலாந்து) ரூ.12 கோடி
அனிகெட் சவுத்ரி (இந்தியா) ரூ.2 கோடி

மும்பை இந்தியன்ஸ்
நிகோலஸ் பூரன் (மேற்கு இந்திய தீவுகள்) ரூ.30 லட்சம்
மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) ரூ.2 கோடி
கே.கவுதம் (இந்தியா) ரூ.2 கோடி
கான் ஷர்மா (இந்தியா) ரூ.3.2 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இயோன் மோர்கன் ( இங்கிலாந்து) ரூ.2 கோடி
ராகுல் டிவேதியா (இந்தியா) ரூ.25 லட்சம்
தங்கராசு நடராஜன் (இந்தியா) ரூ.3 கோடி

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்
டான்மை அகர்வால் (இந்தியா) ரூ.10 லட்சம்
முகமது நபி (ஆப்கானிஸ்தான்) ரூ.30 லட்சம்
இக்லாவியா திவேதி (இந்தியா) ரூ.75 லட்சம்
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) ரூ.4 கோடி
பிரவின் தம்பி (இந்தியா) ரூ.10 லட்சம்

குஜராத்
பாசில் தம்பை (இந்தியா) ரூ.85 லட்சம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) ரூ.4.2 கோடி