கடலுக்கு செல்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! காற்றின் வேகம் அதிகரிப்பு

கடலோர பகுதிகளான கொழும்பு, புத்தளம்,மன்னார், பலப்பிட்டிய, மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில்,ஒரு மணித்தியாலத்திற்கு காற்றின் வேகம் 60 கிலோமீற்றராக அதிகரிக்க கூடும் என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க உள்ளமையால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளின் ஈடுபடுபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனை தவிர ஏனைய பிரதேசங்களின் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகம் வரை அதிகரிக்கலாம் எனவும் இதனால், மீனவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு காலநிலை அவதானி சந்சீத்தா ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனை தவிர காங்கேசன்துறை முதல் திருகோணமலை, பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் இடியுடன் கூடிய மழைப்பெய்யக் கூடும் எனவும் இந்த அறிவிப்பு அடுத்த 36 மணிநேரம் வரை செல்லுப்படியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.