கல்முனையில் இந்திய வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம்!

இந்தியாவை சேர்ந்த காது மூக்கு,தொண்டை வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாமொன்று மே 26ம் திகதி தொடக்கம் 30 ம் திகதி வரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்படவுள்ளது.

கொழும்பு, கல்முனை ரொட்டரி கிளையின் (ROTARY CLUB) அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் காது மூக்கு ,தொண்டை தொடர்பாக சிகிச்சை பெற விரும்புபவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலை வரவேற்பு கரும பீடத்தில் தங்களது பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் என்பவற்றை மே 26 ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ளுமாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.