கல்முனை ஆதாரவைத்தியசாலை, மட்டு /போதனா வைத்தியசாலைகள் இணைந்து கோமாரியில் நடமாடும் வைத்தியசேவை !  

கல்முனை ஆதாரவைத்தியசாலையும் மட்டு /போதனா வைத்தியசாலையும் இணைந்து கோமாரி கிராமத்தின் மக்களுக்கான இலவச மருத்துவமுகாமொன்றை 18/05/17 அன்று நடாத்தினர். இதில் பல நன்மை பெற்றுள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

காலை ஆரம்பமாகி பகல் 2 மணி வரை நடத்ததப்பட்ட வேளையிலும் இறுதிவரை மக்கள் வருகை தந்ததை பார்வையிட முடிந்தது.
இதில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் உட்பட்ட வைத்திய, மருந்துப் பிரிவினரும் கலந்து கொண்டனர்.