கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் பவனி

கல்முனை மாநகரில் வீற்றிக்கும் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயத் தேர் பவனி இன்று 09.04.2017 காலை 7 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்ட 36 அடி உயரமான தேர் கல்முனை நகர் ஊடாக சென்று மீண்டும் கல்முனை சந்தை வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.

இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேர் இழுத்து செல்லப்பட்டதுடன் பால்குட பவனி காவடிகள் மாணவிகளின் கூத்துகள் என்பனவும் அங்கு இடம் பெற்றது.

படங்கள்-கிரிஷன்