கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்த்தான ஏ விளம்பி வருட பிரமோட்சவ பெருவிழா!

கல்முனை நகர் அருள் மிகு

ஸ்ரீ முருகன் தேவஸ்த்தான ஏ விளம்பி வருட பிரமோட்சவ பெருவிழா புதன்கிழமை (9)காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
மணிபல்லவம் என வேதங்களால் புகழ் கண்ட சிவபூமியில் பலவளங்களாலும் சிறந்து விளங்கும் கல்முனை நகரின் கண்ணே பன்னெடும் காலமாக ஸ்ரீவள்ளி தேவயானை சமேதரராய் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிரியா கால ஆலய பிரதம குரு ஆரிய பாஷா விற்பன்னர் ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவம் அவர்களினால் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
திருவிழாக்காலங்களில் 6வது நாள் திருவிழாவன்று பாற்குடப்பவனி நிகழ்வும், 8ஆம் திருவிழாவன்று வேட்டைத்திருவிழாவும் அதனைத்தொடர்ந்து 12 ஆம் ஞாயிற்றுக்கிழமை நாள் விசேட நிகழ்வான தேரோட்ட நிகழ்வும் அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை தீர்த்தோட்சவ நிகழ்வும். இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம், திருவூஞ்சல் நிகழ்வும் நடைபெற்று இவ்வாண்டிற்கான உற்சவ நிகழ்வுள் இனிதே நிறைவுறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.