கல்முனை வலயத்தின் இவ்வாண்டிற்கான தமிழ்த் தினப்போட்டிகள்

 

 

கல்முனை வலயத்தின் இவ்வாண்டிற்கான தமிழ்மொழித்தினப் போட்டிகள் நேற்று(09) கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையின் சிசிலியா மேரி அரங்கில் கல்முனை வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் பீ.எம்.வதுர்தீன் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை வலயத்தில் உள்ள 40 பாடசாலைகள் கலந்து கொள்ளும் தமிழ் மொழி தினப்போட்டிகள் கல்முனை வலயத்தின் தமிழ் பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜனின் நெறிப்படுத்தலில் கீழ் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது.

நாற்பது பாடசாலைகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தனி நிகழ்வுகள் 22 உம், குழு நிகழ்வுகள் 10 உம் நேற்று(09) நடைபெற்றதோடு ஏற்கனவே 14 நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

மேலும் வலயமட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கான மாவட்ட மட்டப்போட்டிகள் சம்மாந்துறை அல்.மர்ஜீம் மகளீர் கல்லூரியில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

குறிப்பாக இம்முறை புதிதாக பொத்துவில் உப வலயமும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டு 5 வலயங்ளுக்குமான அனைத்து போட்டிகளும் இந்தப்பாடசாலையிலே நடைபெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.