கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி (05.04.2017) பாடசாலை அதிபர் திரு.ஏ.யோகராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.மயில்வாகனம்,  கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சு.திரவியராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்,  உதவிக் கல்விப் பணிப்பாளர்(உடற்கல்வி) திரு.யு.அப்துல் சத்தார்,  உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக்கல்வி) திரு.யு.டு.ஆ.ஜகான்கீர்,  ஆசிரிய ஆலோசகர் திரு.மு.சாந்தகுமார்,  செயற்திட்ட உத்தியோகத்தர் திருமதி.P..சந்திரரூபன்   ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.