கல்வியினோடுதலைமைத்துவம் போன்றபலதிறன்களினைவளர்துக்கொண்டாலேஎதிர்காலவாழ்வில் சிறந்தவெற்றியினைப் பெறலாம் : கணேசமூர்த்திகோபிநாத்

(எஸ்.ஸிந்தூ)
எமதுகிழக்கின் இளைஞர் முன்னணியினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் இவ் இலவசக் கருத்தரங்கிற்குநீங்கள் வருகைதந்திருக்கின்றீர்கள்.
மட்டக்களப்புமாவட்டத்தின் பலபிரதேசங்களிற்கும் நான் விஜயம் செய்தபோதுநான் உணர்ந்தவிடயம் எமதுமாணவர்கள் பூரணமானகல்விவளத்தினைபெறுவதற்குபெரிதும் அல்லலுறுகின்றனர். பொருளாதாரம்,போக்குவரத்து,மேலதிகவகுப்புவசதிகள் போன்றவற்றில் பலதடைகளினைகொண்டிருக்கின்றனர்.
குறிப்பாகபடுவான்கரைபிரதேசத்தில் பெரிதும் இப்பிரச்சினைகளைஎன்னால் அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே இவ்வாறானதடைகளைநீக்கிஎமதுதமிழ் சமூகத்தினையும் கல்வியில் தரம் உயர்த்துவதன் மூலம் முன்னேற்றும் நோக்கத்தில் எம்மால் இக் கருத்தரங்குகள்
ஒழுங்குபடுத்தப்பட்டுநடைமுறைப்படுத்திகொண்டுவருகின்றோம். கருத்தரங்கின் மூலம் விஞ்ஞானம்,வரலாறு,கணிதம்,தமிழ் ஆகியபாடங்களில் உங்களினைதேற்சியடையவைத்து இறுதிப்பரீட்சைக்குதயார்ப்படுத்தலேநோக்கமாகும். 11 வருடகல்விப்பயணத்தில் நீங்கள் சந்திக்கும் முக்கியமானதொருபடிக்கல்லேசாதாரணதரப் பரீட்சை,அவ் படிக்கல்லினைவெற்றிகரமாகநீங்கள் ஏறிச்செல்வதற்காகவே இக் கருத்தரங்குஎம்மால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களாகியநீங்கள் கல்விமாத்திரம் அல்லாதுஉங்கள் மத்தியில் தலைமைத்துவம்,சகோதரத்துவம்,விட்டுக்கொடுக்கும் பண்புபோன்றநற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறுவளர்த்துக் கொண்டால் மாத்திரமேநீங்களும் நாளை இவ் உலகில் சிறந்தமனிதர்களாகதிகழலாம். உங்களிடம் இருக்கும் தயக்கங்கள், கூச்சசுபாகம்,மேடைக்கூச்சம் போன்றவற்றைகளைந்தெறிந்துஆக்கபூர்வமானஎதனையும் தயக்கம் இன்றிசெய்யக்கூடியவர்களாகமாறவேண்டும். மாணவர்களாகியஉங்களிடம் இருந்துநான் எதிர்பார்ப்பதுபரீட்சையில் சிறந்தபெறுபேறுகளினை. அதனைஅடைவதற்கு இக்கருத்தரங்குகளினைசரியானமுறையில் பயன்படுத்துவீர்கள் எனநம்புகின்றேன். எமதுபிரதேசங்களில் காணப்படும் சிறந்தஆசிரியர் வளங்களைஒன்றிணைத்துஉங்கள் பிரதேசங்களிற்குவருகைதந்துசேவைவழங்குகின்றோம்.  ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ எனும் பழமொழிக்குஅமையசந்தர்ப்பத்தினைசரியாகபயன்படுத்துவீர்கள் எனநம்புகின்றேன் எனஇம்மாதம் 11ம், 12ம் திகதிகளில் மட்-பட்-வெல்லாவெளிகலைமகள் வித்தியாலயத்தினையும், மட்-அரசடித்தீவுவிக்னேஸ்வராவித்தியாலயத்தினையும் மையமாககொண்டு அப் பிரதேசத்தில் உள்ளபாடசாலைமாணவர்களைஒன்றிணைத்துகிழக்கின் இளைஞர் முன்னணியினரால் நடாத்தப்பட்டிருந்த (க.பொ.த) சாதாரணதரமாணவர்களிற்கானபரீட்சைக்குதயார்ப்படுத்தும் இலவசக் கல்விக் கருத்தரங்குகளில் மாணவர்களிடம் உரையாற்றுகையில் முன்ணியின்  தலைவரும் தேசியமொழிக் கற்கைள் மற்றும் பயிற்சிநிறுவனத்தின் உதவிப் பணிப்பாளருமானகணேசமூர்த்திகோபிநாத் கூறியிருந்தார்.