காட்டு யானைகள் பிரதேசத்தில் நுளைவதனை தடுப்பதற்கான கலந்துரையாடல்..

காரைதீவு பிரதேச நல்லிணக்க குழுவின் ஏற்பாட்டால் காட்டு யானைகள் பிரதேசத்தின் நுழைவதனை தடுப்பதன் ஊடாக இன முரண்பாட்டை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் இன்று (06.07.2017) காலை 9.30 மணியளவில் காரைதீவு பிரதேச சபை கேட்போர்கூடத்தில் M.M.சையுதீன் தலைமையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது. முதல் நிகழ்வாக இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இன் நிகழ்வில் PCA தேசிய இணைப்பாளர் திரு.T.தயாபரன் சம்மாந்துறை உதவி பொலிஸ் அதிகாரி M.S.தேஜான் பெரேரா, T.ராஜேந்திரன், M.S.ஜலீல் ,C .நந்தகுமார்,பிரியந்த (வன ஜீவராசிகள் திணைக்களம் அம்பாறை) மேலும் கிராம உத்தியோகத்தர்கள் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

படங்கள்-சியாம் , சுவிதன்