காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற வீர மக்கள் தின சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள்

தழிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்(PLOTE) செயலதிபர் அமரர்.க. உமாமகேஸ்வரன் அவர்களின் 28வது நினைவு தினத்தை முன்னிட்டு PLOTE- DPLF இன் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து சுற்றுப் போட்டி தொடரும் காரைதீவு றிமண்டர் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றப் போட்டி தொடரும் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில தினங்களாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இப் போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வுகள் இன்று 15.07.2017 காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வுகளுக்கு அதிதிகளாக தழிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருர் திரு.தர்மலிங்கம் சித்தாத்தன் அவர்களும் தழிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.வியாளேந்திரன் அவர்களும் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் விவேகானந்தா,ரமைண்டர் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்களும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் சொறிக்கல்முனை எல்மோ அணியை தோற்கடித்து சொறிக்கல்முனை சான்றோகுருஸ் அணி வெற்றிபெற்றது.

கிரிக்கெட் இறுதிப் போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தை தோற்கடித்து தம்பிலுவில் ரேன்ஜஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.
மேலும் இன் நிகழ்வில் எமது பிரதேசத்திற்கு சிறந்த சேவை ஆற்றியவர்கள் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்