காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற வரலட்சுமி விரத பூசைகள்…

மகத ராஜ்ஜியத்தில், குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கு சாருமதி என்கிற பெண்ணும் அவளது கணவனும் வசித்துவந்தனர். அவள் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள். சிறந்த பக்தி உடைய அவளின் கனவில் வந்த லட்சுமி, தன்னை வரலட்சுமியாக வழிப்பட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று கூறினாள். தாயாரே எடுத்துக் கொடுத்ததாக எண்ணிய சாருமதி அதன் பிறகு வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி அம்மனை வழிபட்டாள். வரலட்சுமியை வழிபட்டு அவளின் வாழ்வின் தரம் உயர்வதைக் கண்ட பிற பெண்களும், சாருமதியிடம் தங்களுக்கும் இப்பூஜையை எடுத்துத் தருமாறு கூறி, அதன் பின்னர் வரலட்சுமி விரதத்தை அவர்களும் கடைப்பிடித்தனர்.

வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.

அந்தவகையில் இன்று 04/08/2017 வரலட்சுமி விரத பூசைகள் காரைதீவு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம் மற்றும் ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலயங்களில் வெகுசிறப்பாக இடம் பெற்றது.

இதன் போது சுமங்கலிப் பெண்களும்,கன்னிப் பெண்களும் இன்றைய நாளில் வரலஷ்மி தேவியை நினைந்து விரதம் நோற்று பூசைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.

 

மகாவிஷ்ணு ஆலயம் மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

நந்தவன சித்தி விநாயகர் ஆலயம் மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்