காரைதீவில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

(நாகராஜ்)

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு 04 ஆம் 05 ஆம் திகதிகளில் பிரதேச சபையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து பொலிசார் இராணுவத்தினரின் உதவியுடன் காரைதீவு 6 ஆம் 7 ஆம் பிரிவுகளில் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன் டெங்கு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பெயர்களையும் பதிவுசெய்துள்ளனர்.