காரைதீவில் தற்போது மின்னல்,இடி முழக்கத்துடன் கூடிய மழை பெய்கிறது

இன்று (12) மாலை 05 மணியிலிருந்து காரைதீவு பிரதேசத்தில் மின்னல்,இடி முழக்கத்துடன் கூடிய மழைவீழ்ச்சியானது  பெய்துவருகின்றது. இதனால் சில வீதிகளின் தாழ் நில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக சூழலில் காணப்பட்ட அதிக வெப்பநிலையானது தற்போது குறைவடைந்து குளிர்சியாக காணப்படுகின்றது.