காரைதீவில் பாசிப்பயறு அறுவடை விழா…

காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில் நேற்று (31.07.2017) தேசிய உணவு உற்பத்தி திட்டத்தில் செய்கைபண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இடம்பெற்றது.

காரைதீவு விவசாய போதனாசிரியர் பா.குணநீதராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி A. ரவீந்தீரன் அவர்களும் மற்றும் நிந்தவூர் வலய விவசாய போதனாசிரியர்கள் காரைதீவு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.