காரைதீவில் மும்மூரமாக டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள்

அண்மை காலமாக மிக வேகமாக எமது பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் எமது காரைதீவு பிரதேசத்திலும் இடம் பெற்று வருகின்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக காரைதீவு – 01, 02, 09, 10 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இன்று டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.