காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய பால்குட பவனி

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அதனை முன்னிட்டு இன்று (06) வியாழக்கிழமை இடம் பெற்ற பால்குடபவனியானது காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆலய குருக்கள் நிருவாக சபையினர் உள்ளிட்ட பக்தர்கள் பாதைவழியாக பால்குடத்தை தலையில் ஏந்திய வாறு காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து பின்னர் கண்ணகி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இந்த பால்க்குட பவனியில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

படங்கள்-வசந்த்