காரைதீவு கோட்டமட்ட மெய்வலுனர் போட்டிகளின் முதலாம் நாள் நிகழ்வுகள் !

காரைதீவு கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வலுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்றையதினம்(07) காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி தலைமையில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

இவ் விளையாட்டு நிகழ்வில் காரைதீவு கோட்டத்தை சேர்ந்த 10 பாடசாலைகள் பங்குபற்றி இருந்தது.

இன்றய நாள் நிகழ்வில் ஆண் பெண் இரு பாலாருக்குமான 100மீட்டர் ஓட்டம்,ஈட்டி எறிதல்,குண்டு வீசுதல்,பரிதி வட்டம் வீசுதல்,உயரம் பாய்தல்,நீளம் பாய்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்று கொண்டிருக்கின்றது.

இதன் போதான படங்களை இங்கே காணலாம்…