காரைதீவு நந்தவன விளையட்டுக்கழகத்தினால் புலமையாளர் பாராட்டு விழா

காரைதீவு நந்தவன விளையட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (02)காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் கடந்த வருடம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்சிகளும் இடம் பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டார். மேலும் இன் நிகழ்விற்கு கல்முனை லயன்ஸ் கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.