காரைதீவு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இன்று (11) இரவு 07:45 மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் (முச்சந்திக்கு அருகாமையில்) கல்முனையில் இருந்து நிந்தவூர் நோக்கி வருகைதந்த மோட்டார் சைக்கிளும் நிந்தவூரில் இருந்து கல்முனை நோக்கி வருகைதந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது.

இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.