காரைதீவு பிரதேச இளைஞர் சம்மேளன புனரமைப்புக் கூட்டம் !

காரைதீவு பிரதேசத்தின் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புனரமைப்புக் கூட்டம் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (12)இடம்பெற்றிருந்தது.

மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ,விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் உள்ள இளைஞர் கழக அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டபுனரமைப்புக் கூட்டத்தில் புதிய தலைவராக ந.டினேஸ் அவர்களும் செயலாளராக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அவர்களும் என சம்மேளனத்தின் நிர்வாக குழுவிற்கு மேலும் பல பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் 2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட காரைதீவு பிரதேச இளைஞர் கழகங்களுக்கான சான்றிதழ்களும் இன் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.