காரைதீவு பிரதேச செயலகத்தின் 2017 ம் ஆண்டின் முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

காரைதீவு பிரதேச செயலகத்தின் 2017 ம் ஆண்டின் முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது 16.01.2017 இன்று காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டாலின் கீழ் நடைபெற்றது .

இக்கூட்டத்திற்கு காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சருமாகிய கெளரவ பைசல் காசிம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ T. கலையரசன் அவர்களும் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா அவர்களும், மற்றும் பிரதேச செயலக கணக்காளர் ஜனாப். S. L. சர்தார் மிர்சா அவர்களும் பிரதேச சபை செயலாளர் திரு.நாகராஜா அவர்களும் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் , பாடசாலை அதிபர்கள் , மத ஸ்தாபனங்களின் தலைவர்கள் ,கிராம அவிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர். தொடர்சியாக இந்திகழ்வில் 2016 ம் ஆண்டு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டதுடன் . இக்கூட்டத்தில் 2017 மேற்கொள்ள வேண்டிய துறைரீதியான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. திணைக்கள தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட சில வேலைத்திட்டங்களுக்கு நடப்பாண்டில் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரினால் வாக்குறுதி அளிக்கப்பட்டது