காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பாவனையாளர் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக உற்பத்தி பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு விளக்களிக்கும் செயலமர்வு 13.03.2017 அதாவது இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.விவேகனந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வுக்கு உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி, கிருபை ராஜா அவர்களும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு வளவாளராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் ஜனாப். அ.சர்பான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.