காரைதீவு பொலிஸ் நடமாடும் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள்…

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய ஒருமாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொலிஸ் நடமாடும் சேவை நிறைவு நிகழ்வு நேற்று (29) காரைதீவில் சிறப்புற இடம்பெற்றது .

குறித்த நடமாடும் சேவையின் நிறைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் மாலை 04மணியளவில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுடன் ஆரம்பமாகியது. மாலை 7 மணியளவில் காரைதீவு கடற்கரையில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.இவ் பொலிஸ் நடமாடும் சேவை விளையாட்டு நிகழ்சிகளில் வெற்றி பெற்ற ,கலாசார நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந்த நடமாடும் சேவையின் மூலமாக சிரமதானம், சுகாதார விழிப்புணர்வு, போன்ற சேவைகளை சிறந்த முறையில் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்-மு.காந்தன்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்