காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

நேற்று (04)ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் தாயகம் நோக்கிய கல்வி செயற்திட்டத்தின் கீழ் கமு/விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் இரண்டாம் தவணை பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்த மாணவர்களையும் ஊக்குவிக்குக்கும் முகமாக சுவாட் அமைப்பும் , ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பும் இணைந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு அதிபர் திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவாட் அமைப்பினர் , ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பு (கி.மா) பணிப்பாளர் ஜெயசிறில்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.