காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் தாகசாந்தி நிகழ்வு…

பாற்கடலிலே பள்ளி கொண்டு பாலகரெம்மை காத்திடும்,ஹரி ஒம் நமோ நாரயணா எனும் மந்திரம் உரைப்பின் அபயம் அழித்து அழிவினை தடுக்கும்,காத்தற் தொழிலின் கண்கண்ட​ தெய்வமாம் காரைதீவு மஹா விஷ்ணுவின் ஆவணி ஓண​ மகா உற்சவம் கடந்த 22-08-2017 அன்று ஆரம்பமானது.
உற்சவத்தின் 11ம் நாளாகிய இன்று 01.09.2017 மகா விஷ்ணு கருடவாகனமேறி அலங்கரிக்கப்பட்ட​ முத்துச் சப்பறத்தில் அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் வண்ணம்​ தேரோடும் வீதிவழியாக​ வலம் வந்தார்.
இன் நிகழ்வில் கலந்துகொண்ட பக்த அடியவர்களுக்கு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினால் கழக தலைமை காரியாலயத்திற்கு முன்பாக நீராகாரம் வழங்கப்பட்டது.இதன் போதான படங்கள்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்