காரையடி அம்பாறை பிள்ளையார் ஆலய பால்குட பவனி

காரைதீவு காரையடி அம்பாறை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அதனை முன்னிட்டு இன்று (05) வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பால்குடபவனியானது காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆலய குருக்கள் நிருவாக சபையினர் உள்ளிட்ட பக்தர்கள் பாதைவழியாக பால்குடத்தை தலையில் ஏந்திய வாறு வீதி வழியாக அம்பாறை பிள்ளையார் ஆலயத்தை சென்று பின்னர் மூல மூர்த்தியாகிய பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இந்த பால்க்குட பவனியில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.