கிட்டங்கி ஊடாக மண்டூர் பதி திருத்தல பாதயாத்திரை…

மனிதனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தொய்வமாகவும் மாற்றுவதுதான் இந்து தர்மம், அந்தவகையில் மரபுகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகள், கலாச்சார விழுமியங்களை பேணும் முகமாக காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவிலிருந்து மண்டூர் முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரையானது இன்று 26/08/2017 அதிகாலை 4 மணியளவில் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் வேலுக்கான பூஜை இடம்பெற்று கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு வேல் கொண்டுவருதல் நிகழ்வு இடம்பெற்று அதிகாலை 5 மணிக்கு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஒன்றுகூடல் மற்றும் விசேட பூசை என்பனவும் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து காலை 5.45 மணிக்கு ஆயிரக்கணக்கான அடியார்களுடன் மண்டூர் பதியிற்கான திருத்தல பாதயாத்திரை ஆரம்பமாகி தற்போது கிட்டங்கி ஊடாக செல்கின்றது.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்